தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை..
தமிழக பள்ளி மாணவர்கள் ‘ப்ரீ மெட்ரிக்‘ மற்றும் ‘போஸ்ட்மெட்ரிக்‘ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் போன்ற பள்ளி மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை மேல் நிலை வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு முடியும் வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்க, பயிலும் பள்ளியின் மூலம் அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித்தொகை ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மாணவர்கள் கற்றலில் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பெற ஊக்கம் பெருகின்றனர்.
தற்போது அரசு சார்பாக கல்வி உதவித்தொகை ‘ப்ரீ மெட்ரிக்‘ மற்றும் ‘போஸ்ட்மெட்ரி என்று பிரிக்கப்பட்டு வழங்கப்டுகிறது. ப்ரீ மெட்ரிக் என்பது 9,10 வகுப்பு, போஸ்ட் மெட்ரிக் என்பது 10ம் வகுப்புகளுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆகும். தற்போது 2021-2022ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரேவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கப்படவுள்ளது.
அதனால் உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று அதை உரிய முறையில் பூர்த்தி செய்து அதனுடன் சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து பிப்ரவரி 10ம் தேதிக்குள் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும், , escholarship.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment