திருப்புதல் தேர்வு: கல்வித்துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வை போன்றே, திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பொதுத் தேர்வு நடத்துவதை போன்றே, திருப்புதல் தேர்வுகளையும் நடத்த வேண்டும்.
விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து, திருத்திக் கொள்ள வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை, அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டுக்கு வழங்க கூடாது.
மேலும், விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை, பள்ளி கல்வி துறையின், 'எமிஸ்' மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பின்னர் அறிவிக்கப்படும். திருப்புதல் தேர்வுகளை புகார்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாகி, பொது தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தலாம் என்ற தொலைநோக்கு பார்வையுடன், இந்த தேர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment