தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பிப்.1ம் தேதி ஆலோசனை..
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக ஜன.31ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10,11,12 பொதுதேர்வு ஏற்பாடு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் பல்வேறு அவதாரங்களை எடுத்து பரவி வருகிறது. இத்தகைய கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 19 மாதங்களாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது.
அதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகல்வித்துறை வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி வரும் பிப்.1ம் தேதி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடத்தப்பட உள்ள ஆலோசனை கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை, பொதுத்தேர்வு ஏற்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment