> தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆரம்ப வகுப்புக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



பள்ளிகள் திறப்பு:


தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தொடர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் முறையில் கற்பிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருந்தாலும், அதிக நோய் தொற்று பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் இறுதி மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அரசின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு குறைந்த அவகாசம் மட்டும் தேர்வுக்கு இருப்பதால்,அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்து வகுப்புகளுக்கும் 30% முதல் 50% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.


தற்போது தமிழகத்தில் திடீரென்று அதிக அளவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. ஆனால் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக அறிவித்த படி ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment