> TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த வகையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றன.கொரோனா தாக்கம் கடந்த 2 வருடங்களில் அதிகரித்து வந்ததால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளிவரவில்லை.


இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் TNPSC தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், மற்றும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. மேலும் TNPSC தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2, 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html) வெளியிடப்பட்டுள்ளது. எனவே TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் இணையதளத்திற்கு சென்று பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை பார்த்து பயனடையலாம்.

Share:

0 Comments:

Post a Comment