8th social science guide | Term 3 | Lesson.6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை - Book back answers
Lesson.6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ………………………..
அ.குடியரசுத்தலைவர்
ஆ.பிரதம அமைச்சர்
இ.ஆளுநர்
ஈ.முதலமைச்சர்
விடை : குடியரசுத்தலைவர்
2. இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
அ.தேசிய பாதுகாப்பு
ஆ.தேசிய ஒற்றுமை
இ.அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
ஈ.மேற்கூறிய அனைத்தும்
விடை : மேற்கூறிய அனைத்தும்
3. இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
அ.ஜனவரி 15
ஆ.பிப்ரவரி 1
இ.மார்ச் 10
ஈ.அக்டோபர் 7
விடை : ஜனவரி 15
4. அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது
அ.பாதுகாப்பு அமைச்சகம்
ஆ.தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இ.திட்ட மேலாண்மை நிறுவனம்
ஈ.உள்துறை அமைச்சகம்
விடை : உள்துறை அமைச்சகம்
5. இந்திய கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
அ.1976
ஆ.1977
இ.1978
ஈ.1979
விடை : 1978
6. இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்படையாக கொண்டது அவைகளுள் ஒன்று
அ.சத்தயமேவ ஜெயதே
ஆ.பஞ்சசீலம்
இ.மேற்கூறிய இரண்டும்
ஈ.மேறகூறிய எவையுமில்லை
விடை : பஞ்சசீலம்
7. பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை
அ.அந்தமான் மற்றும் மாலத்தீவு
ஆ.அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இ.இலங்கை மற்றும் மாலத்தீவு
ஈ.மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
விடை : அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் _____________
விடை : உதக மண்டலம்
2. இந்திய கடற்படையின் தலைமை தளபதி _____________ ஆவார்
விடை : குடியரசுத்தலைவர்
3. இந்திய விமானப் படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி _____________ ஆவார்
விடை : அர்ஜீன்சிங்
4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வடிவமைத்த முதன்மைச்சிற்பி_____________
விடை : ஜவஹர்லால் நேரு
5. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் _____________
விடை : வி.கே.கிருஷ்ணமேனன்
III.பொருத்துக
1. நெல்சன் மண்டலா -8 உறுப்பினர்கள்
2. தேசிய போர் -நினைவுச் சின்னங்கள்பீல்டு மார்ஷல்
3. மானக் ஷா -எரிசக்தி மேம்பாடு
4. சார்க் -இனவெறிக் கொள்கை
5. பி.சி.ஐ.எம் -புது டெல்லி
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ
IV. சரியா / தவறா என்று குறிப்பிடுக
1. மத்திய ஆயுதக் காவல் படைகள் (இஅPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
விடை : தவறு
2. மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளின் ஒன்று
விடை : சரி
3. விரைவு அதிரடிப்படையானது, மத்திய ரிசர்வ் காவல்படையின் (இஅPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்
விடை : சரி
4. Nஇஇ மாணவர்களுக்கு அடிப்படையில் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது
விடை : சரி
5. வங்கதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்
விடை : தவறு
6. இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் நிலப்பாலமாக செயல்டுகிறது
விடை : சரி
V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
1. ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க
i. இந்திய இராணுவப் படை ஆயுதப்படைகளின் நில அடிப்படையிலான பிரிவு ஆகும்
ii. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்மல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.
அ.i மட்டும் சரி
ஆ.ii மட்டும் சரி
இ.i மற்றும் ii சரி
ஈ.i மற்றும் ii தவறு
விடை : i மற்றும் ii சரி
2. கூற்று : குடியரசுத்தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்
காரணம் : குடியரசுத்தலைவர் நாட்டின் தலைவராகவும், மிக உயர்ந்த பதவி நிலையும் வகிக்கிறார்
அ.கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ.கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ.கூற்று சரி, காரணம் தவறு
ஈ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
2. கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது
காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்ற இந்தியா நம்புகிறது
அ.கூற்று சரி, காரணம் தவறு
ஆ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ.கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஈ.கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
விடை : கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
4. இனவெறிக் கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல
i. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்
ii. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
ii. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது
அ.i மற்றும் ii
ஆ.ii மற்றும் iii
இ.ii மட்டும்
ஈ.iii மட்டும்
விடை : iii மட்டும்
5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
அ.மாலத்தீவு
ஆ.இலங்கை
இ.மியான்மர்
ஈ.லட்சத்தீவுகள்
விடை : லட்சத்தீவுகள்
V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி
1. தேசிய பாதுகாப்பு அவசியமானது ஏன்?
- ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு அவசியமானது ஆகும். இது நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்
2. பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக
- அ) SFF
- Special Frontier Force – சிறப்பு எல்லைப் படை
- ஆ) ICG
- Indian coast Guard – இந்தியக் கடலாேரக் காவல்படை
- இ) BSF
- Border Security Force – எல்லை பாதுகாப்புப் படை
- ஈ) NCC
- National Cadet Corps – தேசிய மாணவர் படை
3. மத்திய ரிசர்வ் காவல் படை பற்றி சிறு குறிப்பு எழுதுக
- அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவற்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினைத் திறம்பட மற்றும் திறமையாக பராமரிப்பதற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் உதவுவதே மத்திய ரிசர்வ் காவல்படையின் நோக்கம் ஆகம்
4. அணிசேரா இயக்க நிறுவனத் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுக
- ஜவஹர்லால் நேரு – இந்தியா
- டிட்டோ – யுகோஸ்லாவியா
- நாசர் – எகிப்து
- சுகர்னோ – இந்தோனிசியா
- குவாமே நிக்ரூமா – கானா
5. வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளை எழுதுக
- தேசிய நலனைப் பாதுகாத்தல்
- உலக அமைதியினை அடைதல்
- ஆயுதக் குறைப்பு
- காலனித்துவம், இனவெறி மற்றம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்
- நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- பொருளாதார வளர்ச்சி
6. சார்க் உறுப்பு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக
- இந்தியா
- வங்கதேசம்
- பாகிஸ்தான்
- நேபாளம்
- பூடான்
- இலங்கை
- மாலத்தீவு
- ஆப்கானிஸ்தான்
VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக
1. இந்தியா இராணுவப் படையின் அமைப்பு மற்றம் நிர்வாகத்தினை விவரி
- இந்தியா இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
- இது ஜெனரல் என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட படைத்தளபதியால் வழி நடத்தப்படுகிறது.
- இந்திய இராணுவம் ரெஜிமேன் என்ற அமைப்பு முறையைக் கொண்டது
- இது செயல்பாட்டு ரீதியில் புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, அந்திய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாத்தல், நாட்டின் எல்லைக்குள் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுதல் இதன் முதன்மைப் பணிகளாகும்.
2. துணை இராணுவப் படை பற்றி எழுதுக
- உள்நாட்டு பாதுகாப்பை பபராமரிக்கவும், கடலோரப் பகுதியை பாதுகாக்கவும்
- இராணுவத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
- இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
- இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணியிலும் இப்படைகள் ஈடுபடுகின்றன
- அமைதி காலங்களில் இந்த துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கின்றன
அவைகள்
- அஸ்ஸாம் ரைபிள்ஸ்
- சிறப்பு எல்லைப்புறப் படை
3. பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகளை எழுதுக
- ஜவஹர்லால் நேரு அவர்கள் பஞ்சசீலம் என்றழைக்கப்பட்ட இந்தியாவின் அமைதிக்கான ஐந்து கொள்கைகளை அறிவித்தார்.
அவைகள்
1.ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
2.பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
3.பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
4.பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றம் ஒத்துழைத்தல்
5.அமைதியாக இணைந்திருத்தல்
4. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது எப்படி?
அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு
- இந்தியா எப்போதும் சர்வதேச மற்றம் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பு காெண்டுள்ளது
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது நட்புறவுகளை வளர்ப்பது மற்றும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது
அண்டை நாடுகளுக்கான முன்னுரிமைக் கொள்கை
- வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்கு தேவையான ஆதரவை இந்தியா அளித்து வருகிறது.
- பொருட்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றம் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்தவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது – இவை இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
0 Comments:
Post a Comment