9th Social Science Guide இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1.விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம்
அ) தௌலதாபாத்
ஆ) டெல்லி
இ மதுரை
ஈ) பிடார்
Answer:
அ) தௌலதாபாத்
2.தக்காண சுல்தானியங்கள் ______ ஆல் கைப்பற்றப்பட்டன.
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) அலாவுதீன் பாமன்ஷா
இ ஒளரங்கசீப்
ஈ) மாலிக்காபூர்
Answer:
இ) ஔரங்கசீப்
3.______ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
அ) பாமினி
ஆ) விஜயநகர்
இ) மொகலாயர்
ஈ) நாயக்கர்
Answer:
ஆ) விஜயநகர்
4.கிருஷ்ணதேவராயர் ______ ன் சமகாலத்தவர்.
அ) பாபர்
ஆ) ஹுமாயுன்
இ) அக்பர்
ஈ) ஷெர்ஷா
Answer:
இ) பாபர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ______
Answer:
போர்ச்சுக்கீசியர்கள்
2.கி.பி.(பொ.ஆ) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ______ போரில் தோற்கடித்தது.
Answer:
தலைக்கோட்டைப்
3.விஜயநகரம் ஓர் _____ அரசாக உருவானது.
Answer:
ராணுவத்தன்மை கொண்ட
4.நகரமயமாதலின் போக்கு ______ காலத்தில் அதிகரித்தது.
Answer:
விஜயநகர அரசர்
5.______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
Answer:
மொகலாயர்
III. சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்.
1.அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும், அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
Answer:
அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்
2.அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் பாகம் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.
இ) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.
ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
Answer:
அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
3.அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
இ மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
ஈ) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினார்.
Answer:
அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
4.கூற்று (கூ) : கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம் (கா) : இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு ; காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது
5.i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைக் சோழர்கள் வடித்தனர்.
ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
அ) (i) சரி (ii) தவறு
ஆ) (i), (ii) ஆகிய இரண்டும் சரி
இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு
ஈ) (i) தவறு (ii) சரி.
Answer:
இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு
V. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி
1.மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.
Answer:
மாலிக்காபூரின் படையெடுப்புகள்:
- கி.பி. 1296 – 1316ல் நடைபெற்ற அலாவுதீன் கில்ஜி ஆட்சியின்போது முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் உணரப்பட்டது. கி.பி. 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும் படைத்தளபதியுமான மாலிக்காபூர் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்றுவட்டத்துக்குள் வர நேர்ந்தது.
- செல்வங்களைக் கவரும் நோக்கில் பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. ‘தௌலதாபாத்’ என மறுபெயர் சூட்டப் பெற்ற தேவகிரி கைப்பற்றப்பட்டது. நாட்டின் இரண்டாவது வலிமைமிகு தளமாயிற்று.
2.விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்டவம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
- சங்கம் வம்சத்தின் ஹரிகரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு உருவாக்கப்பட்டது.
- சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ, ஆர வீடு வம்சாவளிகள்.
3.பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
- பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூ லப் பொருள் எளிதாகக் கிடைத்தது.
- தாவரச்சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.
4.நகரமயமாக்கலுக்கு உதவிய காரணிகள் யாவை?
Answer:
- பெரிய நகரங்களும், சிறிய நகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினை பூர்த்தி செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன. விரிவான வலைப்பின்னல் போன்ற சாலைகள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
- சிறு நகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயுள்ள கிராம உட்பகுதிகளை இணைத்தன.
- பக்தர்களின் தொடர் வருகையால் புனித தலங்கள் நகரங்களாக வளர்ச்சியடைந்தன. சந்தை உருவாகி உற்பத்தியையும் வணிகத்தையும் ஊக்குவித்தது. பொருளாதார மையங்களாயின.
5.பட்டு வளர்ப்பு என்றால் என்ன?
Answer:
- பட்டு வளர்ப்பு என்பது மல்பெரி பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறையாகும். 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
- ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது.
VI. கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி
1.கி.பி.(பொ.ஆ) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.
Answer:
மொகலாயர்கள் – கி.பி.(பொ.ஆ) 1526 – 1707:
- கி.பி.பொ.ஆ) 1526ல் முதலாம் பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்டு மொகலாயப் பேரரசை பாபர் நிறுவினார். மாபெரும் மொகலாயர்கள்’ எனக் குறிப்பிடப்படும் அறுவரில் அக்பரும், ஒளரங்கசீப்பும் அடங்குவர்.
- அக்பர் நாடுகளைக் கைப்பற்றுதல், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணுதல் மூலம் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.
- மாபெரும் கடைசி மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தது. இந்தியத்துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. அவருக்குப்பின் பேரரசு பலவாறாகப் பிரிந்தாலும் ஐரோப்பியர் வருகையால் முடிவு பெற்றது.
- 17ஆம் நூற்றாண்டில் சிவாஜி தலைமையில் எழுச்சி பெற்ற மராத்திய அரசராக மையம் மொகலாயர் அதிகாரத்தை மேற்கு இந்தியப் பகுதிகளில் மதிப்பிழக்கச் செய்தது.
- மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக கேரளத்தின் தென்மேற்குப் பகுதி, தென் தமிழகப் பகுதிகள் மட்டுமே இருந்தன.
2.இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சிகளை விளக்குக.
Answer:
இடைக்கால இந்தியாவின் வணிக வளர்ச்சி :
- இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை பிழைப்புக்கான பொருளாதார நிலையில் செலவாணி என்பது பண்டமாற்று, உற்பத்தியாளர் உபரியை உற்பத்தி செய்து அவரே வாழ்விடப் பகுதி வாரச் சந்தையில் விற்பனை செய்தல், உற்பத்தியாளரிடமிருந்து விற்பனை செய்வதை இடைத்தரகர்கள் மேற்கொள்ளுதல்.
- கடைகளோடும், கடைவீதிகளோடும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்ட நகரங்கள், நாட்டின் பிறபகுதிகளோடு சாலைகளால் இணைக்கப்பட்டதால் பிராந்திய வணிகத்தின் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
- இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறுகப்பல்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டன. முக்கிய துறைமுகங்கள் (சூரத், மசூலிப் பட்டினம், கோழிக்கோடு
- இந்தியப் பெருங்கடலின் குறுக்கே கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்காவரை கடல் வணிகம்
- செழித்தோங்கியது. நிலவியல் ரீதியாக இந்தியப் பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பது இப்பிராந்திய வணிகத்தில் ஒரு சிறப்பு.
- ஏற்றுமதிப் பொருட்கள்: துணி, மிளகு, நவரத்தினக்கற்கள், இந்திய வைரம், இரும்பு, எஃகு.
- இறக்குமதிப் பொருட்கள்: பட்டு, செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம்.
3.“தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்கவும். ”
Answer:
தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” ஏனெனில்,
- தமிழ்க வரலாற்றின் செழிப்புமிக்க இக்காலத்தில் வணிகமும், பொருளாதாரமும் விரிவடைந்தன.
- நிர்வாக இயந்திரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் கிராமம் (ஊர்) ஆகும், நாடு, கோட்டம் (மாவட்டம்) என அமைந்தது. மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’. சந்தை கூடுமிடங்கள், சிறுநகரங்கள் ‘நகரம்’. இவை தனக்கென ஒரு மன்றத்தையும் (சபை) கொண்டிருந்தன.
மன்றங்களின் பொறுப்புகள் :
- நிலங்கள், நீர்நிலைகள், கோவில்கள் பராமரிப்பு, மேலாண்மை செய்தல்.
- உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்.
- அரசுக்கு சேரவேண்டிய வரிகளை வசூல் செய்தல்
- சோழர்கள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
- முதல் பரிமாணம்: புதிய கோவில்கள் கட்டப்படுதல்.
- இரண்டாவது பரிமாணம்: பழைய கோவில்கள் பன்முனைச் சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறுதல்.
VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் இடைக்கால இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிக்கவும்.
2. சோழர்கள் காலத்து முக்கியக் கட்டங்களை பற்றிய படங்களைச் சேகரிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைப்படத்தில் இடைக்கால இந்தியாவின் முக்கிய இடங்களை குறிக்கவும்.
0 Comments:
Post a Comment