> 9th Social Science Guide பண்டைய நாகரிகங்கள் Book Back Answers ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Social Science Guide பண்டைய நாகரிகங்கள் Book Back Answers

9th Social Science Guide பண்டைய நாகரிகங்கள் Book Back Answers

Lesson 2 : பண்டைய நாகரிகங்கள்

I. சரியான Answerயைத் தேர்வு செய்க

 1.சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________ என்கிறோம்.

அ) அழகெழுத்து

ஆ) சித்திர எழுத்து

இ) கருத்து எழுத்து

ஈ) மண்ணடுக்காய்வு

Answer:

ஆ) சித்திர எழுத்து

 2.எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________

அ) சர்கோபகஸ்

ஆ) ஹைக்சோஸ்

இ) மம்மியாக்கம்

ஈ) பல கடவுளர்களை வணங்குதல்

Answer:

இ) மம்மியாக்கம்

 3.சுமேரியரின் எழுத்துமுறை _____ ஆகும்

அ) பிக்டோகிராபி

ஆ) ஹைரோகிளிபிக்

இ) சோனோகிராம்

ஈ) க்யூனிபார்ம்

Answer:

ஈ) க்யூனிபார்ம்

 4.ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை

அ) தங்கம் மற்றும் யானை

ஆ) குதிரை மற்றும் இரும்பு

இ) ஆடு மற்றும் வெள்ளி

ஈ) எருது மற்றும் பிளாட்டினம்

Answer:

ஆ) குதிரை மற்றும் இரும்பு


 5.சிந்துவெளி மக்கள் இழந்த மெழுகு செயல் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _____ ஆகும்

அ) ஜாடி

ஆ) மதகுரு அல்லது அரசன்

இ) பறவை

ஈ) நடனமாடும் பெண்

Answer: ஈ) நடனமாடும் பெண்

 6.i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்

ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்

iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்

அ) (i) சரி

ஆ) (i) மற்றும் (ii) சரி

இ) (iii) சரி 

ஈ) (iv) சரி

Answer:

ஈ) (iv) – சரி

 7.i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்

iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்

iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ) (iii) சரி

ஈ) (iii) மற்றும் (iv) சரி

Answer:

இ) (iii) சரி

 8.பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

அ) சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

ஆ) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்

ஈ) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

Answer:

இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்


 9.கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.

காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

ஆ)கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

இ) கூற்று சரி; காரணம் தவறு

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

Answer:

ஆ) கூற்றும் கரரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1._______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

Answer:

ஸ்பிங்க்ஸின்

 2.எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ______ ஆகும்.

Answer:

ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)

 3._______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைவிளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.

Answer:

ஹமுராபியின் சட்டத் தொகுப்பு

 4.சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ______ ஆவார்.

Answer:

லாவோ ட் சு

 5.ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

Answer:

சுடுமண்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

 1.அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

ஆ)க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.

இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

Answer:

ஆ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.


 2.அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்

ஆ)அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.

இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.

ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும் .

Answer:

அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்

V. சுருக்கமான விடை தருக.

 1.எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக

Answer:

  • பாரோக்கிகளின் சாதிகளான பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. எ.கா: கெய்சோ அருகிலுள்ள கிஸா பிரமிடுகள்.
  • பிரமிடுகள் எகிப்தியரின் பொறியியல், கட்டுமானம், மனித ஆற்றல் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்துகின்றன.

  • 73 மீட்டர் நீள 20 மீட்டர் உயர சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக் படிமம் ஸ்பிங்க்ஸ், உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று.

 2.சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.

Answer:

  • சுமேரிய நாகரிகத்தில் மெஸபடோமியா) நகரின் மத்தியில் கட்டப்பட்ட செங்குத்தான பிரமிடுகள் வடிவ கோவில்கள் ‘சிகுராட்’ எனப்படும். உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு.
  • சிகுராட்டைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், விருந்து அரங்குகள், தொழிற்கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள், கல்லறைகள் அடங்கிய வளாகங்கள் இருந்தன. (புகழ்பெற்ற சிகுராட் இருக்குமிடம் உர்).

 3.ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி

Answer:

  • சுமேரியர்களின் குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி குறித்த 282 குற்றப்பிரிவுகளுக்கான சட்டங்களைக கூறும் முக்கியமான சட்ட ஆவணம்.
  • “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப்பல்” என்ற பழிக்குப்பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பழைய சட்டங்களின் தொகுப்பு

VI. விரிவான Answerயளிக்கவும்.

 1.ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.

ஹைரோகிளிபிக்ஸ் – எகிப்திய எழுத்து முறை :

  • நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் இந்த சித்திர எழுத்து முறை பயன்பட்டது.
  • இந்த எழுத்துக்கள் எகிப்தியரின் குறியீகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன.

கியூனிபார்ம் – சுமேரிய எழுத்து முறை:

  • சுமேரியர்கள் கில்காமெஷ் என்ற காவியம் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கு இந்த ஆய்வு வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.
  • இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

 2.தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.

Answer:

தத்துவம்:

  • லாவோட்சு – தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்.

கன்பூசியஸ்:

  • ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார்.

மென்சியஸ்:

  • சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி.

இலக்கியம்:

இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ – போர்க்கலை 

அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் – திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்)

ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் – மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்

 3.சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுது.

Answer:

சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:

  • “சிந்துவெளி நாகரிகம்” பண்டைய நாகரிகங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
  • ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.
  • அவர்கள் சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் கற்களையும் கட்டமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களில் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்க கூடும்.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள நன்கு தளமிடப்பட்ட பல அறைகள் கொண்ட மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
  • தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன.
  • அவர்கள் உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேலும் பருத்தி மற்றும் பட்டாடைகளைப் பயன்படுத்தினார்கள். செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டார்கள். காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது.
  • ஹரப்பர்களின் எழுத்துக்களுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வெண்கலக் கால நாகரிகம் நிலவிய இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்

2. பிரமிடுகள் மற்றும் எகிப்தியர்களின் எழுத்துமுறை குறித்து ஒரு விளக்கப்படம் தயாரிக்கவும்.

3. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த முத்திரைகள், பானைகள் உள்ள படங்களைச் சேகரிக்கவும்.

Share:

0 Comments:

Post a Comment