> 10th Tamil Unit 4 - பெருமாள் திருமொழி ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Tamil Unit 4 - பெருமாள் திருமொழி

10th Tamil Unit 4 - பெருமாள் திருமொழி 


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. *

பாசுர எண்: 691

பாடலின் பொருள்

    மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

சொல்லும் பொருளும்

  1. சுடினும் – சுட்டாலும்
  2. மாளாத-தீராத
  3. மாயம் – விளையாட்டு

II. பலவுள் தெரிக

1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

குலசேகராழ்வாரிடம் இறைவன்

இறைவனிடம் குலசேகராழ்வார்

மருத்துவரிடம் நோயாளி

நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

III. குறு வினா

1.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.

IV. சிறு வினா

1.“மாளாத கால் நோயாளன் போல” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

உடலில் ஏற்பட்ட புண்

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம்

வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

  பெருமாள் திருமொழி – கூடுதல் வினாக்கள்  

I. இலக்கணக் குறிப்பு

  1. மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
  2. அறுத்து – வினையெச்சம்
  3. ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்

II. பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. பெருமாள் திருமொழியைப் பாடியவர்

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. குலசேகர ஆழ்வார்
  4. ஆண்டாள்

விடை : குலசேகர ஆழ்வார்

3. குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்

  • எட்டாம் நூற்றாண்டு
  • ஏழாம் நூற்றாண்டு
  • ஆறாம் நூற்றாண்டு
  • ஐந்தாம் நூற்றாண்டு

விடை : எட்டாம் நூற்றாண்டு

 

4. மாயம் என்பதன் பொருள்

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

 

5. சங்க கால இலக்கியங்களில் நிறைந்துள்ளவை

  1. அறிவியல் கருத்துகள்
  2. அறியாமை
  3. மூட நம்பிக்கை
  4. பொய்மை

விடை : அறிவியல் கருத்துகள்

 

6. தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

III. குறு வினா

1. தமிழர், பண்டைய நாளிலிருந்தே எதனை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்?

தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

2. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.

1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்

2. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.

3. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.

3. குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு வரைக

குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.

பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.

எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

4. அறுத்து என்ற சொல்லுக்கு பகுபத உறுப்பிலக்கணம் காண்க

அறுத்து = அறு + த் + த் + உ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1.பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105

ஆ) 155

இ) 205

ஈ) 255

Answer:

அ) 105

 

2.வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.

அ) கேரள, பாலக்காடு

ஆ) கர்நாடக, மாண்டியா

இ) ஆந்திரா, நெல்லூர்

ஈ) கேரள, திருவனந்தபுரம்

Answer:

அ) கேரள, பாலக்காடு

 

3.குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.

அ) அன்னையாக

ஆ) காதலியாக

இ) தோழனாக

ஈ) தந்தையாக

Answer:

அ) அன்னையாக

 

4.வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.

அ) மோனை

ஆ) எதுகை

இ) உருவகம்

ஈ) அந்தாதி

Answer:

ஆ) எதுகை

 

5.நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.

அ) மூன்றாம்

ஆ) நான்காம்

இ) ஐந்தாம்

ஈ) ஆறாம்

Answer:

இ) ஐந்தாம்

 

6.பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

Answer:

ஆ) குலசேகராழ்வார்

 

7.குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.

அ) ஆறாம்

ஆ) ஏழாம்

இ) எட்டாம்

ஈ) பத்தாம்

Answer:

இ) எட்டாம்

 

8.‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?

அ) 681

ஆ) 691

இ) 541

ஈ) 641

Answer:

ஆ) 691

 

9.‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்

அ) பொய்மை

ஆ) நிலையாமை

இ) விளையாட்டு

ஈ) அற்புதம்

Answer:

இ) விளையாட்டு

 

10.காதல் நோயாளன் போன்றவர் …………………..

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

Answer:

அ) குலசேகராழ்வார்

 

11.மருத்துவன் போன்றவர் …………………..

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

Answer:

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

 

12.“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்க ள்

ஈ) மருத்துவர்

Answer:

அ) குலசேகராழ்வார்

 

13.மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

Answer:

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

14.பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.

அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

ஆ) முதலாயிரம்

இ) ஐந்தாம் திருமொழி

ஈ) திருப்பாவை

Answer:

ஈ) திருப்பாவை

 

15.வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..

அ) குலசேகராழ்வார்

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

இ) மக்கள்

ஈ) மருத்துவர்

Answer:

ஈ) மருத்துவர்

 

16.சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.

இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.

ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.

Answer:

அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

 

17.“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”

– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்

அ) வாளால் – மாளாத

ஆ) நோயாளன் – மாயத்தால்

இ) மருத்துவன் – நோயாளன்

ஈ) வாளால் – நோயால்

Answer:

அ) வாளால் – மாளாத

 

18.“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

அ) வாளால் – மாளாத

ஆ) நோயாளன் – மாயத்தால்

இ) மருத்துவன் – நோயாளன்

ஈ) வாளால் – நோயால்

Answer:

இ) மருத்துவன் – நோயாளன்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts