10th Social Science Second Revision Answer key 01-04-2022
- 10th Social science Second Revision Answer key 2022 ( WTS Way to Success) - English Medium - Download Here
- 10th Social science Second Revision Answer key 2022 ( WTS Way to Success)- Tamil Medium - Download Here
- 10th Social science Second Revision Question paper 2022 - Tamil Medium Medium - Download Here
- 10th Social science Second Revision Question paper 2022 - English Medium Medium - Download Here
பகுதி - 1
- (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
- (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
- 10th Tamil second Revision Answer key 2022 - Download here
- 10th Tamil second Revision Question paper 2022 - Download here
- 10th English second Revision Answer key 2022 - Download here
- 10th English second Revision Question paper 2022 - Download here
- 10th Maths second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th Maths second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
- 10th Science second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th Science second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
- 10th social science second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th social science second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
1.பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார் ?
(அ) ரூஸ்வெல்ட்
(ஆ) சேம்பெர்லின்
(இ) உட்ரோ வில்சன்
(ஈ) பால்டுவின்
2.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது ?
(அ) 1827
(ஆ) 1829
(இ) 1826
(ஈ) 1927
3.வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்
(அ) கல்கத்தா
(ஆ) மும்பை
(இ) டெல்லி
(ஈ)மைசூர்
4.அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டவர் :
(அ) காந்தியடிகள்
(ஆ) லால் பகதூர் சாஸ்திரி
(இ) ஜவஹர்லால் நேரு
(ஈ) வல்லபாய் பட்டேல்
5.கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
(அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாக இல்லை
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
(இ)காரணம், கூற்று இரண்டுமே தவறு
(ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது. 6.மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
(அ) வண்டல்
(ஆ) கரிசல்
(இ) செம்மண்
(ஈ) உவர்மண்.
7.பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் :
(அ) வெள்ளப் பெருக்கு கால்வாய்
(ஆ) வற்றாத கால்வாய்
(இ) ஏரிப்பாசனம்
(ஈ) கால்வாய்
8.மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் :
(அ) உயிரி சக்தி
(ஆ) சூரியன்
(இ) நிலக்கரி
(ஈ) எண்ணெய்
9.சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது :
(அ) போக்குவரத்து
(ஆ) கனிமப் படிவுகள்
(இ) பெரும் தேவை
(ஈ) மின்சக்தி கிடைப்பது
10.மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு :
(அ) வரைபடவியல்
(ஆ) மக்களியல்
(இ) மானுடவியல்
(ஈ) கல்வெட்டியல்
11.ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை ?
(அ) முதலமைச்சர்
(ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
(இ) மாநில தலைமை வழக்குரைஞர்
(ஈ) உயர் நீதிமன்ற நீதிபதிகள்
12.1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்
(அ) வியாபாரம் மற்றும் வணிகம்
(ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பு
தொடர்பானது
(இ) கலாச்சார பரிமாற்றங்கள்
(ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
13.இந்திய அரசாங்கத்தால் 1991 இல் _______அறிமுகப்படுத்தப்பட்டது.
(அ) உலகமயமாக்கல்
ஆ) உலக வர்த்தக அமைப்பு
(இ) புதிய பொருளாதார கொள்கை
(ஈ) பன்னாட்டு நிறுவனம்
14.________இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
(அ) நீலப் புரட்சி
(ஆ) வெள்ளைப் புரட்சி
(இ) பசுமைப் புரட்சி
(ஈ) சாம்பல் புரட்சி
பகுதி - I (15-28)
குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.வினா எண் 28-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
15. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
- இத்தாலி – முசோலினி
- ஜெர்மனி – ஹிட்லர்
- ஸ்பெயின் – பிராங்கோ
16. முத்துத் துறைமுக நிகழ்வை விவரிக்கவும்
- 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன் அறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
- அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கி விட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
- இத்தாக்குதலில் பல போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
- மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.
17. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக.
- உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
- துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
- அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
- 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
- 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
- அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.
18. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது ?
- நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குக் செல்லும் படையை பலப்படுத்தினார்.
- மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600 க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
- மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
- களக்காட்டில் நடைப்பெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
19. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளை தருக?
- பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
- இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
- ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்ட னர்.
- உத்தி விரைவில் பாளையக்காரர்களின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
20. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- காடு மற்றும் மலை மண்
- வறண்ட பாலை மண்
- உப்பு மற்றும் காரமண்
- களிமண் மற்றும் சதுப்புநில மண்
21. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை ?
- ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
- கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக்கனிமங்கள், ஆ. அலோகக்கனிமங்கள்.
22. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
- ஆந்தரசைட்: 80 முதல் 90%
- பிட்டுமினஸ் : 60 முதல் 80%
- பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60%
- மரக்கரி: 40% கும் குறைவு
23. வேளாண்மை வரையறுக்கவும்.
- வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.
24. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவர் இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
25. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
- ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை .
26.உலக மயமாக்கல் என்றால் என்ன ?
- உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
- அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
27. FAO வின் படி உணவு பாதுகாப்பை வரையறுக்கவும்.
- “எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.”
28. இந்திய பல்நோக்குத் திட்டங்களில் எவையேனும் நான்கினை அவற்றால் பயனடையும் மாநிலங்களுடன் எழுதுக.?
பகுதி - III
குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
29. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க,
இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்:
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:
- இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
- ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது.
- மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது.
- கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகளென ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
அணு ஆயுதப்பரவல்:
- அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன.
- பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.
பன்னாட்டு முகமைகள் :
- பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.
- அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.
30. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளாச்சிகளில் வேலுநாச்சியாரின் சிறப்புகளை விவரிக்கவும்
31. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க: '
இராமகிருஷ்ண பரமஹம்சர் :
- இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
- அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
- அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
- மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
சுவாமி விவேகாநந்தர்:
- பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
- இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
- மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
- இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
- அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
- 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது
32. வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
புரட்சி வெடித்தல்:
- 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
- கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
- இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
- கோட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார்.
- சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
- ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
- அவர்களின் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.
ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை:
- கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
- புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.
புரட்சியின் பின்விளைவுகள் :
- திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
- புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.
33. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரிக்கவும்
34. வேறுபடுத்துக :
(a) புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்
(b) உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்
காரணம் கூறுக : வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு
- மக்கள் தொகையில் விவசாயம் 50% பங்கினையும், நாட்டு வருமானத்தில் 25% பங்கினையும் கொண்டுள்ளதால் வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.
35. நகரமயமாக்கம் என்றால் என்ன ? அதன் சிக்கல்கள் யாவை?
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
இந்திய நகரமயமாக்கம்:
நகர்புற மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது.
நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:
- நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
- நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
- குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
- போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
- குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
- வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
- திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்குகிறது.
- குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.
36. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரிக்கவும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.
இருப்பினும், அப்பொழுது இருந்த அற்றிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்.ை
பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.
1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L.480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.
எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது,
இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு, பசுமைப் புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
37. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரிக்கவும்.
1. அமைச்சரவை தொடர்பானவை:
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
2. ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
மாநில அரசு வழக்குரைஞர்
மாநில தேர்தல் ஆணையர்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
3. சட்டமன்றம் தொடர்பானவை:
சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
38. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:
அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
ஜவஹர்லால் நேரு – இந்தியா
டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
சுகர்னோ – இந்தோனேசியா
குலாமே நிக்ரூமா – கானா
39. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
உலகமயமாக்கலின் சவால்கள்:
உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
40. (i) வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகளை விவரிக்கவும்.
(ii)இடப்பெயர்வு வேளாண்மை - குறிப்பு வரைக,
குறிப்பு: பார்வையற்ற மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் முறையே நிகழ்வுகளையும் இடங்களையும் -குறிப்பிட்டுக் காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.
41. காலக்கோடு வரைக.
1900 முதல் 1930 வரையிலான இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
42. கீழ்க்காணும் இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
(i) ஜப்பான் (ii) ரஷ்யா (iii) ஜெர்மனி (iv) சீனா (v) பசிபிக் பெருங்கடல்
பகுதி – IV
- குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
43. (அ) 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்காக இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.
அல்லது
(ஆ) கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
வீரபாண்டிய கட்டபொம்மன் :
பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
ளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
ஆட்சியர்கள் பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும்பகை ஏற்பட அடிப்படையானது.
ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:
1798 ஆகஸ்ட் 19இல் இராமநாதபுத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு, கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு ஜாக்சன் அவரைச் சந்திக்க மறுத்தார்.
ஊமைத்துரை கட்டபொம்மன் தப்ப உதவினார்.
சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:
மே 1799இல் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
பானெர்மென் செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார்.
பானெர்மென் இராமலிங்கரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
கட்டபொம்மன் மறுத்தார்.
கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் :
கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார்.
எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.
திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறில் பாளையங்கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.
44. (அ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(i) வண்டல் மண் (ii) சென்னை (iii). ஹிராகுட் அணை
(v) பருத்தி விளையும் பகுதி (vi) மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலம்
(vi) சேலம் (iv) கங்கை டெல்டா (viii) நெல் விளையும் பகுதி
அல்லது
(i) கரிசல் மண் (ii) மும்பை (iii) மேட்டூர் அணை (iv) இரும்புத்தாது உற்பத்தி மையம்
(v) இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் (vi) காவிரி டெல்டா (vii) விசாகப்பட்டினம் (viii) தேயிலை விளையும் பகுதி
0 Comments:
Post a Comment