> 10th Tamil Important Questions - 2024 Public Exam ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Tamil Important Questions - 2024 Public Exam

10th Tamil Important Questions 2024

Prepared By : P.sivasamy ., M.A., B.ed

10th Tamil Important Questions - 2024 Public Exam - Download Here

1)"மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" -

 இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக..

2)வசனகவிதை- குறிப்பு வரைக.

3)பூவின் பல்வேறு நிலை பெயர்கள் யாவை)

4)மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

5)'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

6)கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லோர்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக, 

7)செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக..

8)பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

9)மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

10)வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

11)குறிப்பு வரைக - அவையம்,

12)காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

வினா எண் 22-28

ஏதேனும் 5 எழுதுதல்

முக்கிய வினாக்கள்

1)'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டு.

2)"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச்சுட்டி, அதன் இலக்கணம் தருக,

3)தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

4)வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

5)விடை எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

6)குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

7)பா எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

வினா எண் 29-31

ஏதேனும் 2 எழுதுதல்

முக்கிய வினாக்கள்

  • இதில்  (31) பத்தியை படித்து விடையளித்தல்

1)ஜெயகாந்தன் தன் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

2)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எ.கா. தருக.

3)“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்"- இடஞ்சுட்டிப் பொருள் தருக..

4.) புளியங்கன்று ஆழமாக நடப்பட்டது அது போல் - இளமைப்பெயர்களால் 5 தொடர் அமைக்க.

5.சோலைகரகாற்றும் ,மின் விசிறிக்காற்றும் பேசுவது போல் உரையாடல் அமைக்க.

வினா எண் 32-34

ஏதேனும் 2 எழுதுதல்

முக்கிய வினாக்கள்

  • இதில் செய்யுள் மனப்பாடம் கட்டாய வினா (34)

1)தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?

2)தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

3)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக

4)எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

5) பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்

யாவர்?

6)மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

வினா எண் 35-37

ஏதேனும் 2 எழுதுதல்

முக்கிய வினாக்கள்

  • இதில்  (37) அலகிட்டு வாய்ப்பாடு

1)வெண்பாவின் பொது இலக்கணம்?

2)ஆசிரியப்பா பொது இலக்கணம்?

3)நிரல் நிரை அணி?

4)தீவக அணி?

5)தன்மை அணி?

6)தற்குறிப்பேற்ற அணி?

5 மதிப்பெண் வினாக்கள் ?

1)சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

2)இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

3)கருணையனின் தாய் மறைவுக்கு , வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

4) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

5)உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. 

6) இலக்கிய நயம் பாராட்டல் 

7)தமிழாக்கம் தருக 

8) காட்சியை கண்டு கவினுற எழுதுக (படம் உணர்த்தும் கருத்து .) 

9)படிவம் ( நூலக உறுப்பினர் படிவம் , 11th சேர்க்கை படிவம்)

8 மதிப்பெண் வினாக்கள் ?

கட்டுரை

1)சான்றோர் வளர்த தமிழ் 

2)தமிழ் இலக்கண சிறப்பு ,இலக்கியம் ,தொன்மை சிறப்பு 

3) அரசுபொருட்காட்சி சென்ற நிகழ்வு கட்டுரையாக

உரைநடை

1) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக

2) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைக்கவும் 

துணைப்பாடம்

1)அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

2)குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும்– கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத்தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி . 

10th standard Tamil - Online Test ( MCQ ) - New syllabus

Share:

5 Comments:

Popular Posts