11th Tamil first Mid term Model Question paper 2022 -2023 | July unit test
முதல் இடைப் பருவ மாதிரி வினாத்தாள் - ஜூலை
பதினொன்றாம் வகுப்பு
நேரம்:1.30 மணி
பொதுத்தமிழ். மதிப்பெண்கள்: 50
பலவுள் தெரிக: 8x1-8
1) பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
அ) முத்துலிங்கம் - யுகத்தில் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை
ஈ) இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்
i) அ, ஆ ii) அ. ஈ iii)ஆ. ஈ. iv) அ. இ
2) "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்"
அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவுகொண்ட
ஆ) காலத்தால் கனிமங்கள்
இ)கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
3) பாயிரம் இல்லது_____அன்றே.
அ) காவியம்
(ஆ) பனுவல்
இ) பாடல்
ஈ) கவிதை
4) மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க,
அ) அன்னம், கிண்ணம்
ஆ) டமாரம், இங்ஙனம்
ஈ) றெக்கை, அங்ஙனம்
இ) ரூபாய், லட்சாதிபதி
5)பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் - மரபுக்கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை,
இ)யானை டாக்டர் - குறும்பு தினம்
ஈ) ஐங்குறுநூறு- புதுக்கவிதை,
6) "வான் பொய்த்தது" - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள்
அ) வானம் இடிந்தது.
ஆ)மழை பெய்யவில்லை
இ) மின்னல் வெட்டியது
ஈ) வானம் என்பது பொய்யானது.
7) கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
அ) மதிப்புக்கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப் பொருள்கள்
i)அ-மட்டும் சரி
ii) ஆ-மட்டும் சரி
iii) இரண்டும் சரி
iv) அ-தவறு, ஆ-சரி
8) தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) பண்டிதர்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்.
ஈ) பாரதிதாசன்
II. எவையேனும் ஐந்தனுக்கு மூன்று வரிகளில் விடையளி: 5×2=10
9) பேச்சுமொழி,எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது. ஏன்? - பக்கம்
10) பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
11) உயிரெழுத்து பன்னிரண்டு, திருக்குறள், தீர்லடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
12) அணிந்துரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக
13) தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக.
14) ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?
15) அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
III. எவையேனும் நான்கனுக்கு குறுகிய வடிவில் விடையளி: 4×4=16
16) நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
17) 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
18) மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிறகும் எடுத்துக்காட்டு தருக.
19) வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.
20) “சலச வாவியில் செங்கயல் பாயும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
21) ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.
22) ஏடு தொடக்கி வைத்து' எனத் தொடங்கும் யுகத்தின் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1×4=4
V. எவையேனும் ஒன்றனுக்கு விரிவான விடையளி: 1x6=6.
23) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும், எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
(அல்லது)
24) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்பாடல்வழி இயற்கை வளங்களை விவரிக்க.
VI. எவையேனும் ஒன்றனுக்கு விரிவான விடையளி: 1×6=6
25) தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இனைக்கப்படுகிறது?
(அல்லது)
26) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக,
0 Comments:
Post a Comment