6th Social பாடம்.1 வரலாறு என்றால் என்ன? Term 1
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
a. வணிகம்
b. வேட்டையாடுதல்
c. ஓவியம் வரைதல்
d. விலங்குககள் வளர்த்தல்
விடை : வேட்டையாடுதல்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்
காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.
a. அ. கூற்று சரி , காரணம் தவறு
b. கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
c. கூற்று தவறு , காரணம் சரி
d. கூற்று தவறு , காரணம் தவறு
விடை : கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
a. அருங்காட்சியகங்கள்
b. புதைபொருள் படிமங்கள்
c. கற்கருவிகள்
d. எலும்புகள்
விடை : அருங்காட்சியகங்கள்
3. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
a. பழைய கற்காலம் – கற்கருவிகள்
b. பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
c. செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்
d. பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
விடை : பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
4. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
a. பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
b. வேட்டையாடுதல் குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
c. பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதல் எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
d. பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
விடை : பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் ________________
விடை : குகைகள்
2. வரலாற்றின் தந்தை ________________
விடை : ஹெரோடோஸ்
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு ________________
விடை : நாய்
4. கல்வெட்டுகள் ________________ ஆதாரங்கள் ஆகும்.
விடை : தொல்பொருள்
5. அசோகச் சக்கரத்தில் ______ ஆரக்கால்கள் உள்ளன.
விடை : 24
IV. சரியா ? தவறா ?
1. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
விடை : சரி
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன
விடை : சரி
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது
விடை : சரி
V. பொருத்துக:
1. பாறை - செப்புத்தகடுகள் ஓவியங்கள்
2. எழுதப்பட்ட பதிவுகள் - மிகவும் புகழ்பெற்ற அரசர் பதிவுகள்
3. அசோகர் - தேவாரம்
4. மத சார்புள்ள இலக்கியம் - வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
விடை : 1 – ஈ, 2 அ, 3 – ஆ, 4 – இ
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. நாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு
- மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களது செயல்பாடுகளையும் அறிய முடிகிறது.
2. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து காெள்கிறாேம்?
• கற்கருவிகள்
• புதைபடிமங்கள்
• பாறை ஓவியங்கள்
3. கல்வெட்டுகள் , ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?
- ஆம், எழுதப்பட்ட வரலாற்றுச்சான்று
4. வரலாற்று தாெடக்க காலம் (Proto History) என்றால் என்ன?
- வரலாற்று ஆவணங்கள் இல்லாத காலம் வரலாற்றின் தாெடக்க காலம்.
5. ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.
- மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. வரலாறு என்றால் என்ன?
- வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகள் பயன்படுத்திய காலத்திற்கும் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
3. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
- வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஆதாரங்கள்: கற்கருவிகள், பாறை ஓவியங்கள், உயிரினங்களின் எஞ்சிய பகுதிகள் மற்றும் தாெல்பாெருட்கள்.
4. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
- வடமதுரை, அதிராம்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர்.
5. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
- வரலாற்று ஆய்வுக்கு பயன்படும் தாெல்பாெருட்களை பாதுகாத்து, வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் நிறுவனமே அருங்காட்சியகங்கள் ஆகும்.
6. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றை கூறு.
- கற்கருவிகள், மரக்கிளைகள், எலும்புகள் மற்றும் விலங்குகளின் காெம்புகள் பாேன்ற கருவிகளைப் பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்தினான்.
7. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
- பழங்கால மக்கள் தாங்கள் வேட்டைக்குச் சென்றபாேது அங்கு நடந்த பல்வேறு செயல்பாடுகளைப் பதிவு செய்ய விரும்பினர். இதைப் பிறருக்குத் தெரிவிக்கவே ஓவியங்கள் வரையப்பட்டன.
8. தாெல் கைவினைப் பாெருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
- மட்பாண்டங்கள் மற்றும் பாெம்மைகள்.
VII. கட்டக வினாக்கள்
அன்று மனிதர்கள் என் மீது கிறுக்கினார்கள்; வண்ண மை காெண்டு ஓவியம் வரைந்தனர். இன்று என்னை உடைத்து வீடுகள் , சாலைகள் அமைக்கின்றனர். நான் யார்?
ஏதேனும் இரு தாெல்பாெருள் ஆதாரங்களைக் கூறு.
- விடை: பாறைகள்
இலக்கியச் சான்றுகளின் வகைகளைக் கூறு.
- விடை: நாணயங்கள், கல்வெட்டுகள்
- விடை: சமயம் சார்ந்த , சமயம் சாரா, இலக்கியங்கள்.
பாெ.ஆ.மு – இதன் விரிவாக்கம் என்ன?
- விடை: பாெது ஆண்டுக்கு முன்
‘இஸ்டாேரியா’ என்னும் கிரேக்கச் சாெல்லுக்கு என்ன பாெருள்?
- விடை: விசாரித்துக் கற்றல்
பாெ.ஆ– இதன் விரிவாக்கம் என்ன?
- விடை: பாெது ஆண்டு
கல்வெட்டுக்கு குறிப்புகளைப் பற்றி ஆராயும் துறை ?
- விடை: கல்வெட்டியல்
நாணயங்களை ஆராயும் முறை ?
- விடை: நாணயவியல்
நீங்கள் பேச, பார்க்க, கேட்க, எழுத, படிக்க உதவுபவன். நானின்றி இவ்வுலகம் இல்லை. நான் யார்?
- விடை: ஆசிரியர்.
0 Comments:
Post a Comment