6th Social Lesson 8 - மக்களாட்சி | Term 3
பாடம்.8 மக்களாட்சி Book Back Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஆதிமனிதன் பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கியனான்
a. சமவெளி
b. ஆற்றோரம்
c. மலை
d. குன்று
விடை : ஆற்றோரம்
2. மக்களாட்சியின் பிறப்பிடம் .
a. சீனா
b. அமெரிக்கா
c. கிரேக்கம்
d. ரோம்
விடை : கிரேக்கம்
3. உலக மக்களாட்சி தினம் ஆகும்.
a. செப்டம்பர் 15
b. அக்டோபர் 15
c. நவம்பர் 15
d. டிசம்பர் 15
விடை : செப்டம்பர் 15
4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் .
a. ஆண்கள்
b. பெண்கள்
c. பிரதிநிதிகள்
d. வாக்காளர்கள்
விடை : வாக்காளர்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ___________
விடை : சுவிட்சர்லாந்து
2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ___________
விடை: ஆபிரகாம் லிங்கன்
3. மக்கள் அளிப்பதன் ___________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுகின்றனர்
விடை : வாக்கு
4. நம் நாட்டில் ___________ மக்களாட்சி செயல்படுகிறது
விடை: பிரதிநிதித்துவ
III. விடையளிக்கவும்
1. மக்களாட்சி என்றால் என்ன?
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”
2. மக்களாட்சியின் வகைகள் யாவை?
• நேரடி மக்களாட்சி (Direct Democracy),
• மறைமுக மக்களாட்சி (அல்லது) பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy)
3. நேரடி மக்களாட்சி – வரையறு.
• நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றர். அனைத்து சட்டத்திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர்.
• அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர்.
• நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.
4. “மக்களாட்சியின் பிறப்பிடம் பற்றி குறிப்பு வரைக
• “மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்”.
• Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
• Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும
5. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?
• இந்திய அரசியலமைப்பு இந்தியர்களை அனைத்து அம்சங்களிலும் வழிநடத்துகிறது மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.
• இது அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதியை உறுதி செய்கிறது.
• இது அரசியல் கொள்கைகள், அரசாங்கத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கிறது.
• அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் மற்றும் வழிநடத்தும் கோட்பாடுகளை சரிசெய்கிறது.
• இது உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.
6. ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்றால் என்ன?
• “மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது. மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம்தான் இருக்கும்.
• சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு இயங்கும் அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
• பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
• இதைத்தான் ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்கிறோம்.”
7. நாடாளுமன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகள் எவை?
• இந்தியா
• இங்கிலாந்து
8. அதிபர் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் எவை?
• அமெரிக்க ஐக்கிய நாடுகள்
• கனடா
9. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (1893) ஆகும்
9. பெண்களுக்கு வாக்குரிமை சில நாடுகள் எவை?
• நியூஸிலாந்து – 1893
• ஐக்கிய பேரரசு – 1918
• அமெரிக்க ஐக்கிய நாடு – 1920
0 Comments:
Post a Comment