> 6th Social Lesson 9 - உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும் | Term 3 ~ Kalvikavi - Educational Website - Question Paper

6th Social Lesson 9 - உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும் | Term 3

6th Social Lesson 9 - உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும் | Term 3


பாடம்.9 உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

a. ஊராட்சி ஒன்றியம்

b. மாவட்ட ஊராட்சி

c. வட்டம்

d. வருவாய் கிராமம்

விடை : ஊராட்சி ஒன்றியம்

2. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

a. ஜனவரி 24

b. ஜுலை 24

c. நவம்பர் 24

d. ஏப்ரல் 24

விடை : ஏப்ரல் 24

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ____________.

a. டெல்லி

b. சென்னை

c. கொல்கத்தா

d. மும்பாய்

விடை : சென்னை

4. நேரடி அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ____________

a. வேலூர்

b. திருவள்ளூர்

c. விழுப்புரம்

d. காஞ்சிபுரம்

விடை : விழுப்புரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ___________ ஆகும்.

விடை : தமிழ்நாடு

2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ___________

விடை: 1992

3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் _______ ஆண்டுகள்.

விடை : 5

4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ___________ ஆகும். 

விடை: வாலாஜாபேட்டை

III. பொருத்துக

IV. விடை தருக 

1. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களை நேரடியாக ஆட்சியில் ஈடுபடுத்துவதற்கும், உள்ளாட்சி அமைப்புகளின் பயனுள்ள அமைப்பு தேவை.

2. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நகர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

4. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?

• ஊராட்சி மன்றத் தலைவர்

• பகுதி உறுப்பினர்கள்

• ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)

• மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர

5. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக.

• குடிநீர் வசதி

• தெருவிளக்கு அமைத்தல்

• தூய்மைப் பணி

• மருத்துவச் சேவை

• சாலைகள் அமைத்தல்

• மேம்பாலங்கள் அமைத்தல்

• சந்தைகளுக்கான இடவசதி

• கழிவுநீர் கால்வாய்

• திடக்கழிவு மேலாண்மை

• மாநகராட்சிப் பள்ளிகள்

• பூங்காக்கள்

• விளையாட்டு மைதானங்கள்

• பிறப்பு, இறப்பு பதிவு. இன்னும்பிற.,

6. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.

• வீட்டுவரி

• தொழில் வரி

• கடைகள் மீதான வரி

• குடிநீர் இணைப்புக்கான கட்டணம்

• நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு

• சொத்துரிமை மாற்றம் – குறிப்பிட்ட பங்கு

• மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு. இன்னும்பிற.

7. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாட்கள் யாவை? அந்நாட்களின் சிறப்புகள் யாவை?

8. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

• கிராம சபை அமைத்தல்

• மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு

• இடஒதுக்கீடு

• பஞ்சாயத்து தேர்தல்

• பதவிக்காலம்

• நிதிக் குழு

• கணக்கு மற்றும் தணிக்கை இன்னும் பிற

9. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

• கிராம பஞ்சாயத்து திறம்பட செயல்பட கிராமசபை அவசியம்.

• இது சமூக நலனுக்கான திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துகிறது

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts