> பள்ளிகளில் புதிய வருகைப்பதிவு செயலி ( 01.01.2023 ) முதல் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளிகளில் புதிய வருகைப்பதிவு செயலி ( 01.01.2023 ) முதல் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

அரசு / அரசு நிதியுதவி பெறும் தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , ஆசிரியல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவுகள் TNSED Schools செயலி ( App ) மூலம் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை தலைமை ஆசிரியர்களும் பின்பற்றுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.




Share:

0 Comments:

Post a Comment