> 10, 11, 12th தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு - விண்ணப்ப தேதி அறிவிப்பு! ~ Kalvikavi - Educational Website - Question Paper

10, 11, 12th தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு - விண்ணப்ப தேதி அறிவிப்பு!

10, 11, 12th தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு - விண்ணப்ப தேதி அறிவிப்பு!

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்


மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான நாட்களில் (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தத்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 05.01.2023

(வியாழக்கிழமை) முதல் 07.01.2023(சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts