12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!!
அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாடங்களை 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 10ஆண்டுக்கு மேலாக கற்று கொடுக்கின்றனர்.
அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:
திமுக ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சி அமைந்து 19 மாதங்கள் ஆகிவிட்டது.
பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
பொங்கல் போனஸ், அட்வான்ஸ் இந்த ஆண்டாவது வழங்க வேண்டும்.
அமைச்சரவையில் முதல்வரின் முடிவை எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
--------------------------------------
எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
0 Comments:
Post a Comment