தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் ஜன.2ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற ஜனவரி 2ம் தேதி அன்று சொர்க்கவாசல் திறப்பு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா முக்கிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
அதன்பின்பு டிசம்பர் 23ம் தேதி அன்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இவ்விழாவை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில், திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற ஜனவரி 2ம் தேதி அன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜனவரி 7ம் தேதி அன்று (சனிக்கிழமை) வேலை நாளாக கருதப்படும் என்றும் அறிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment