> அரசு பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் – அமலாகும் புதிய விதி! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அரசு பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் – அமலாகும் புதிய விதி!

அரசு பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் – அமலாகும் புதிய விதி!

புதுச்சேரி பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்களை மாற்ற இருப்பது குறித்து கல்வித்துறை புதிய உத்தரவினை விதித்துள்ளது.

பாடத்திட்டம்:

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் அனைத்து உயர்கல்விக்கான போட்டி தேர்வுகளும் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் படி கல்வி பயின்ற மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பின்தங்கி இருக்கும் நிலை நீடித்து வருகிறது. முதற்கட்டமாக போட்டித்தேர்வுகளுக்காக பள்ளி மாணவர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளிகளிலேயே நடத்தி வருகிறது. இதைத்தவிர தமிழகம் உட்பட பல மாநில அரசுகளும் தங்கள் அரசு பள்ளிகளில் CBSE தரத்திலான கல்வி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு என்று இதுவரை தனியாக பாடத்திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பாடத்திட்டத்தினை தான் அரசு பள்ளிகளில் புதுவை அரசு பின்பற்றி வந்தது. ஆனால், 2023-2024ம் கல்வி ஆண்டு முதல் புதுவை அரசு பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக CBSE பாடத்திட்டம் அமலாக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் CBSE பாடத்திட்டத்தில் இணைய விண்ணப்பங்களை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment