பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்!
பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்! |
தமிழக அரசு தொடர்ந்து அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையினை இணைக்க என்று அறிவுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு:
ஆதார் எண் நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் தனித்துவ அடையான ஆணையம் மூலமாக வழங்கப்படுகிறது. நாட்டின் முக்கிய அடையாக ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் எண்களுடன் முன்னதாக ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, பான் அட்டை, கேஸ் கணக்கு போன்ற அனைத்தும் இணைக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மத்திய அரசு பொதுமக்களின் மின் இணைப்பு எண்களுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் அரசு மக்களின் தகவல்களை எளிதாக சோதிக்க முடியும். இதற்காக தான் ஆதார் அனைத்து வகை ஆவணங்களையோடும் இணைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் பென்ஷன் போன்ற அனைத்து பலன்களையும் பெற ஆதார் எண் கேட்கப்படுகிறது. இதேபோல், தற்போது 2023 பொங்கல் பரிசு அளிக்கப்பட உள்ள நிலையில், இதற்கு ஆதார் எண் அவசியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment