ஒரு மாணவர் கூட விடுபடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!

ஒரு மாணவர் கூட விடுபடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!


நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் வீடு  வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி  தொடங்கியுள்ளது. கொரோன பெருந்தொற்றால் பள்ளிகள் மூடபட்டபோது லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளி படிப்பை கைவிடும் சூழல் உருவானது. இதனை தடுப்பதற்காக கடந்த கல்வியாண்டில் இடைநிற்றல் மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை  பள்ளி கல்வித்துறை மேற்கொண்டது. அப்போது 80,000 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் கல்வி கற்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில்

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி படிப்பை நிறுத்துவதற்கான சாத்தியமுள்ள மாணவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதிவரை நடைபெறும் இந்த பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விடு வீடாக சென்று மொபைல் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

 15 நாட்கள் வரை பள்ளி செல்லா குழந்தைகள் இடைநிற்றளுக்கான வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுவர். அதே போல் ஒரு மாதமாக பள்ளி செல்லாதவர்கள், 8ம் வகுப்பு வரை முடிக்காதவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கணக்கிடப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கல்விகற்பதற்கான உதவி தேவைப்படுவோரின் விவரமும் கணக்கிடப்பட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பணியில் ஒரு மாணவர்கூட விடுபடக்கூடாதென்றும், இடைநிற்றல் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்த படுகிறார்களா என ரயில்நிலையம், சந்தைகள், உணவகங்களில் கண்காணிக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.  

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts