அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்த அவசரம் ஆசிரியர்கள் அதிருப்தி!
அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்த அவசரம் ஆசிரியர்கள் அதிருப்தி! |
அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை உடனே திருத்தி வழங்க வேண்டும் என்ற கல்வித்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அனைத்து பள்ளிகளிலும் டிச. 16 முதல் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. குறிப்பாக அரசு பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அத்தேர்வு போன்றே அரையாண்டு தேர்வை நடத்த வேண்டும். இதற்கான விடைத்தாள்களை உடனுக்குடன் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து, தேர்ச்சி விபரங்களை டிச., 24 க்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்குமாறு கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் கூறியதாவது:
அரையாண்டு தேர்வு டிச., 16 ல் தொடங்கி 23 ல் தான் முடிகிறது. மொழி பாட ஆசிரியர்கள் இக்கால கட்டத்திற்குள் திருத்தி விடலாம். டிச., 23 ல் நடக்கும் பாட விடைத்தாளை எப்படி ஆசிரியர்கள் ஒரே நாளில் திருத்தி வழங்க முடியும். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வருவதால் ஆசிரியர்கள் விழாக்களை கொண்டாடுவதில் சிரமம் ஏற்படும். எனவே விடைத்தாள் திருத்த கால அவகாசம் வழங்க வேண்டும், என்றார்
0 Comments:
Post a Comment