> தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - நீட்டிக்கப்பட்டுள்ளது! ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - நீட்டிக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - நீட்டிக்கப்பட்டுள்ளது!

எண்ணும், எழுத்தும் பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு டிச.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிச.24 (இன்று) முதல் ஜன.1-ம்தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 முதல் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு அரையாண்டு விடுப்பு முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி ஜன.2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜன.4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன.5-ம் தேதி திறக்கப்படும். இந்நாட்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் இடம் பெறாதவர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று இதர அலுவல் பணிகளை செய்ய வேண்டும். 

விடுமுறை நீட்டிப்பு 1-5 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு.. அதேநேரம், 6 முதல் 12-ம்வகுப்புகளுக்கான விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்தபடி ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts