> இன்றைய கல்விச் செய்திகள் - முக்கிய அறிவிப்புகள்! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இன்றைய கல்விச் செய்திகள் - முக்கிய அறிவிப்புகள்!

இன்றைய கல்விச் செய்திகள் - முக்கிய அறிவிப்புகள்!



  *🔥 ஆரம்பப்பள்ளி 🔥*  

             *🛡      ஆசிரியர்       🛡*

           *💫கல்விச்செய்திகள்🗞️*

*⚜️2053  மார்கழி 02 ~ 17.12.2022  ⚜️*

🔥

🛡️மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜே.இ.இ. தேர்வு பிபரவரி முதல் வாரத்திலும் ஜெ.இ.இ. மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது.

🔥

🛡️பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை 

🔥

🛡️மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதலிடம்   6-8 வரையிலான மாணவர்களுக்கு மதுரையிலும், 9-10 மாணவர்களுக்கு கோவையிலும், 11-12 மாணவர்களுக்கு திருவள்ளூர்,காஞ்சி, செங்கல்ப்பட்டிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

🔥

🛡️எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  

கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு. 

🔥

🛡️குஜராத் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க உதவும் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

🔥

🛡️ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான புதிய வருகை பதிவு முறை.. 2023 முதல் அமல். 

 தற்போது ஜியோ பென்சிங் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் வரம்புக்குள் இருந்தால் தானாகவே அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். அப்போது பச்சை நிறத்தில் ஸ்மார்ட் போனில் ஒளி தென்படும்.- ஜார்கண்ட் மாநில கல்வித்துறை அறிவிப்பு 

🔥

🛡️சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று  சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு

🔥

🛡️அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் தொடர Pay Protection தீர்ப்பு.. அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ராஜினாமா செய்தாலும் Pay Protection உண்டு என நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது

🔥

🛡️4000 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை அறிவிப்பு

Share:

0 Comments:

Post a Comment