தமிழக அரசு பள்ளிகளுக்கு புதிய திட்டம் - ஜனவரி 1 முதல் அமல்? முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்துள்ளது. இதனால் இன்று முதல் ஜனவரி மாதம் வரை விடுமுறை அளிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இதையடுத்து இந்திய அளவில் தமிழகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால் வருகை பதிவை பதிவு செய்ய “TNSET School” என்ற செயலியை தமிழக அரசு உருவாக்கியது. ஆனால் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமமான முறையில் உள்ளதாக பள்ளிகளில் குற்றம் கூறி வந்தனர்.இதனால் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் ஜனவரி 1ம் தேதி முதல் எளிய முறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் வருகை பதிவை பதிவு செய்ய “TNSET Attendance” என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இணைய சேவைகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் பதிவேற்றம் செய்யலாம் என்றும், இன்டர்நெட் சேவை கிடைத்தவுடன் தானாகவே சர்வரில் சேமிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
Tamilarasansrinivasan
ReplyDelete