> 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு - தேதிகள் வெளியீடு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு - தேதிகள் வெளியீடு!

11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு - தேதிகள் வெளியீடு!

பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6, இடைநிலை

/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023 அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக் கான தேதிகள் அறிவித்தல்- தொடர்பாக.

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023 -ல் இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 30.01.2023 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை - 600 025-ல் நடைபெறவுள்ளது.

மேலும், மார்ச்/ஏப்ரல் 2023 இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 07.03.2023 முதல் 10.03.2023 வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்.

செய்முறைத் தேர்வு தொடர்பான விரிவான அறிவுரைகள் பின்னர் தெரிவிக்கப்படும்

ஒம்/ இயக்குநர்

Share:

0 Comments:

Post a Comment