11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் )
1.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
- “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”
2.பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
- நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.
3.ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
- மரங்கள் வெட்டப்பட்டன ,
- மழை பெய்யவில்லை.
- மண்வளம் குன்றியது.
- வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன
4.வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன
- கா- சோலை
- முகில் - மேகம்
- தென்கரை நாட்டின் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.
5.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.
6.காவடிச்சிந்து என்பது யாது?
- தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ .
- முருக பெருமானை வழிபட பால், காவடி முதலானவற்றை கொண்டு செல்வோர் வழியிடை பாடலாக பாடிச் செல்வர்.
7.தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.
பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
8.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
- செயலின் வலிமை,
- தன் வலிமை,
- பகைவனின் வலிமை,
- துணையானவரின் வலிமை
9.மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
- மருந்து : செல்வம்
- மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர்
10.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
- மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
- அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.
11.சாழல் – விளக்குக.
- சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு.
- இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும்.
- இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.
12.உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?
- உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
- அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
- வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.
Pdf. Download
ReplyDelete