> 11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை ) ~ Kalvikavi - Educational Website - Question Paper

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

  • எனக்கு உயிர்தந்தவள் தாய், தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியை கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழம் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்” என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.
( இது சொந்த நடையில் எழுதவேண்டிய விடை . நீங்கள் எந்த கையேட்டில் படித்திரிந்தாலும் அதுவும் சரியான விடையே . மாற்ற வேண்டாம் )

2. ‘மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

  • மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை.
  • சேயோன் மேய மை வரை உலகம் ; என்கிறது தொல்காப்பியம்.  .
  • திராவிடர்களைக் கமில் சுவலபில், ‘மலைநில மனிதர்கள்’ என்கிறார்.
  • இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்து கொன்றன.
  • பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகல ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
  • அவை, பழங்குடியினரின் மலைசார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலைத் தருகின்றன

3. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
  •  லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
  • தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், 
  • தஞ்சைக் கோட்டை முற்றுகை,
  •  இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப்  வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்

4. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?

ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : 

  •  ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

கற்றளிக் கோவில்கள் :

  • செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். 
  • மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்

5. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?

  • வாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

6. ‘தாமஸிகம்’ என்றால் என்ன?.

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. 
  • தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும்.
  •  மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. 
  • இதனைத் ‘தாமஸிகம்’ அதாவது மெட்டீரியலிசம் .
Share:

0 Comments:

Post a Comment

Popular Posts