> தமிழகத்தில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலி - சேர்க்கை, கற்பித்தல் பணியில் சிக்கல்! வாங்க பார்க்கலாம்? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலி - சேர்க்கை, கற்பித்தல் பணியில் சிக்கல்! வாங்க பார்க்கலாம்?

தமிழகத்தில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலி - சேர்க்கை, கற்பித்தல் பணியில் சிக்கல்! வாங்க பார்க்கலாம்?

தமிழக அரசு பள்ளிகளில் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் வரும் 2022-- 23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, கற்பித்தல் பணி பாதிக்கும் நிலையுள்ளது.   கொரோனா கால இடைவெளியால் அரசு பள்ளி மாணவர்களிடம் கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டம் துவங்கப்பட்டது.    

கொரோனா கால மீட்பிற்கு பின் அரசு பள்ளிகளில் 2022 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் முழுவீச்சில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

 ஆசிரியர் தட்டுப்பாட்டில்பள்ளிகள்    கல்வித்துறை இக்கட்டான சூழலில் தவிக்கும் போது, ஆசிரியர் தட்டுப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள்- 4,989, பட்டதாரி ஆசிரியர்கள்- 5,184, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்- 3,876 என 14,019 காலிபணியிடங்கள் உள்ளன.    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை, கற்பிக்கும் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தும். அதிகரித்துள்ள காலிப்பணியிடங்களால் அரசு பள்ளிகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.    

தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம்

    கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 14, 019 காலிபணியிடங்களுக்கு ஆசிரியர்களை நேரடி, பதவி உயர்வில் நியமிக்கும் வரை பள்ளி மேலாண்மை குழுவே தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்து கொள்ள அரசு முதன்மை செயலர் காகர்லா உஷா அனுமதித்துள்ளார்.    இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000, பட்டதாரிக்கு ரூ.15,000, முதுகலை பட்டதாரிக்கு ரூ.18,000 மாதந்தோறும் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Share:

0 Comments:

Post a Comment