தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் தொடர் விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி மாதம் மீண்டும் தொடர் விடுமுறை வர உள்ளதால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர் விடுமுறை:
தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் 2ம் பருவ தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறைகள் 12 நாட்களுக்கு அளிக்கப்பட்டது. இதன்பிறகு, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி மற்றும் , ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17ம் தேதி உழவர் திருநாள் வர உள்ளது.
இதனால் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினமாக இருப்பதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் மற்றொரு புறம் போகி மற்றும் பொங்கல் பண்டிகை இரண்டும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை வர உள்ளதால், இந்த இரண்டு நாட்கள் கிடைக்க வேண்டிய தனிபட்ட விடுமுறைகள் மிஸ் ஆவதாக மாணவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment