TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடா?
TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள்
தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்கள் மற்றும் VAO பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது.
இந்த தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனால் இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் Feb முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment