தமிழக அரசின் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பாடவாரியான பொதுத்தேர்வு அட்டவணை!!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியாகி இருக்கிறது.
தேர்வு அட்டவணை:
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். அதன் படி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற இருப்பதாகவும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் மே 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 10ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியான தேர்வு தேதி அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
ஏப்ரல் 6 -வியாழன் – தமிழ்
ஏப்ரல் 10 -திங்கள்- ஆங்கிலம்
ஏப்ரல் 13- வியாழன்- கணிதம்
ஏப்ரல் 17- திங்கள் -அறிவியல்
ஏப்ரல் 20- வியாழன்- சமூக அறிவியல்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
ஏப்ரல் 14 – செவ்வாய்- தமிழ்
ஏப்ரல் 16 – வியாழன் – ஆங்கிலம்
ஏப்ரல் 20- திங்கள் – இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல் 24 – வெள்ளி – உயிரியல், வரலாறு, தாவரவியல்
ஏப்ரல் 28- செவ்வாய்- வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 30-வியாழன்- கணினி அறிவியல்
மே 5- புதன்- கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 13 – திங்கள் – தமிழ்
மார்ச் 15- புதன் – ஆங்கிலம்
மார்ச் 17- வெள்ளி -கணினி அறிவியல்
மார்ச் 21 – செவ்வாய்- இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 – திங்கள் – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
மார்ச் 31- வெள்ளி – உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- திங்கள் – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
0 Comments:
Post a Comment