> பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு ~ Kalvikavi - Educational Website - Question Paper

பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்.  கூடுதல் தேவை ஏற்பட்டால், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் மூத்த முதுநிலை ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்துக் கொள்ளலாம்.  எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட கூடாது. இந்த வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பின்பற்றி, புகாருக்கு இடமின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts