பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 79 முகாம்களில் இன்று தொடக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்ரல் 10) முதல் தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல்தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்த தேர்வைசுமார் 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான விடைக்குறிப்பு தயாரிப்பு, முகாம்கள் அமைப்பு உள்ளிட்டமுன்னேற்பாடுகள் தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன
அதன்படி, பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள்கள் அனைத்தும் மண்டலதேர்வு மையங்களில் இருந்துதிருத்துதல் முகாம்களுக்கு ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுவிட்டன.
விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்று (ஏப்ரல் 10) தொடங்கி ஏப்ரல் 21-ம் தேதிவரை நடைபெற உள்ளன. அதன்பிறகு மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளை முடித்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வுமுடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை: விடைத்தாள் திருத்துதலில் அனுமதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பணியின்போது ஆசிரியர்கள் மிகவும் கவனமாக இருப்பதுடன், தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பயன் பாட்டுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 Comments:
إرسال تعليق