ஐஸ்வர்யா குழந்தைக்கு வரும் சிக்கல்.. உதவிய தனம்... "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனிற்கு பேங்க் வேலை இருக்கிறது என்ற திமிரில், ஐஸ்வர்யா யாரும் வேண்டாம் என தனியாக இருக்கிறார். இந்நிலையில் அவருடைய குழந்தைக்கு பெரிய ஆபத்து வர உதவிக்கு ஆட்கள் இல்லாமல் அவர் கஷ்டப்பட, அவர் பேசியது எல்லாம் மறந்து தனம் உதவி செய்ய, தவறை உணருவது எல்லாம் அடுத்து வர எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் பிரிந்துவிட, அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணனிற்கு பேங்க் வேலை இருக்கிறது என்ற ஆணவத்தில் ஐஸ்வர்யா அனைவரையும் எதிர்த்து பேசுகிறார். அதனால் அனைவரும் கோவமாக இருந்தாலும், கண்ணனிற்காக எல்லாரும் பொறுமையாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு பெரிய ஆபத்து வர இருக்கிறது.
அதாவது அவர் வீட்டில் தனியாக இருக்க அந்த நேரம் கால் தடுக்கி கீழே விழுகிறார். அதனால் அவர் வயிற்றில் அடிப்பட வலியால் துடிக்கிறார். இந்நிலையில் அந்த நேரம் யாருக்கு போன் செய்வது என தெரியாமல் கஷ்டப்பட அந்த நேரத்தில் தான் தனத்தின் அருமை ஐஸ்வர்யாவிற்கு புரிய வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனத்திற்கு போன் செய்ய, அவர் உடனே வந்து ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
அவர் குழந்தைக்கு பிரச்சனை இல்லை என சொன்னாலும், கீழே விழுந்த சமயத்தில் தனம் தான் அவருக்கு உதவி செய்தது, ஐஸ்வர்யா மனதை மாற்றுமா என்பது எல்லாம் அடுத்து வர இருக்கும் திருப்பமாக இருக்க போகிறது. மேலும் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி திருப்பங்கள் வரும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comments:
إرسال تعليق