> ஜூன் 1ல் யாருக்கெல்லாம் பள்ளிகள் திறக்கும்? முக்கிய அறிவிப்பு..!! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஜூன் 1ல் யாருக்கெல்லாம் பள்ளிகள் திறக்கும்? முக்கிய அறிவிப்பு..!!

 


ஜூன் 1ல் யாருக்கெல்லாம் பள்ளிகள் திறக்கும்? முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து எப்போது வகுப்புகள் துவங்கும் என்பதற்கான முழு அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி துவக்கம்:

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி வகுப்புகள் துவங்கும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்து மாநிலங்களிலும் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்பு எப்போது துவங்கும் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் மே ஒன்றாம் தேதி பள்ளி மூடப்பட்ட நிலையில் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கேரளாவில் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளனர். மத்திய பிரதேஷ் மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆந்திர மாநிலத்தில் மே ஒன்றாம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 12-ம் தேதி அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. மேற்கு வங்காளத்தில் அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment