> ஆசிரியர் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியம்..! ~ Kalvikavi - Educational Website - Question Paper

ஆசிரியர் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியம்..!

 


ஆசிரியர்  பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியம்..!

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .

1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .

2. 27.09 .2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது .27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் .

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தற்போது பணியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும்   ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு , பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும்


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts