> 10th Tamil " சான்றோர் வளர்த்த தமிழ் " கட்டுரை ( Sandror Valartha Tamil ) ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Tamil " சான்றோர் வளர்த்த தமிழ் " கட்டுரை ( Sandror Valartha Tamil )

10th Tamil " சான்றோர் வளர்த்த தமிழ் " கட்டுரை PDF - Download Click Here

  • tamil valartha sandrorgal in tamil சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரைகள் - Download Now

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை ,
  • தமிழின் தொன்மை,
  • ஜி.யு. போப்பின் தமிழ் பணி,
  • வீரமாமுனிவரின் தமிழ்ப்ப ணி,
  • ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணி ,
  • நான்காம் தமிழ்ச்சங்கம் ,
  • உலகத் தமிழ் மாநாடு ,
  • முடிவுரை.

முன்னுரை:
            காற்றினால் ஏற்படும் ஓசையை ஒளியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழிகள் நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்பு இதுகாறும் தோன்றவில்லை என்பதே உண்மை, அவ்வாறு தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி தான் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். இத்தமிழ்மொழி சான்றோர்கள் பலரின் தியாகத்தாலும் உழைப்பாலும் அது இன்று உயர்தனிச் செம்மொழியாக நிலைபெற்று நிற்கிறது. மொழி வளர்த்த சான்றோர்கள் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தமிழின் தொன்மை:

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தென்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தமிழின் நன்மையைக் என்றுமுள தென்தமிழ்" என்பார் கம்பர், 'உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஜி.யு. போப்பின் தமிழ் பணி

தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு தமிழாய் மலர்ந்து, மணம் பரப்பி என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றவர். திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டு வெளியிட்டு திருக்குறளின் பெருமையை உலகறியச்செய்தார். ஆங்கில மொழியை அன்னை மொழியாகக் கொண்ட போப் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என தனது கல்லறையில் எழுதுமாறு இறுதிமுறியில் எழுதி தன்னைத் தமிழராகவே ஆக்கிக் கொண்டார்

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி:

இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர் தமிழகம் வந்து தமிழைக் கற்றார். தமிழ்மொழிப் பற்றினால் 'தைரிய நாதர்' என முதலில் சூட்டிக்கொண்ட தனது பெயரைத் தனித்தமிழாக்கி 'வீரமாமுனிவர்' எனச் சூட்டிக் கொண்டார். இவர் தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்,

ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணி

          யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஆறுமுகனாரது மொழித்திறமையையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்ட திருவாதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்னும் பட்டத்தை அளித்தனர், இவரை 'வசனநடைகைவந்த வல்லாளர்' எனப் பரிதிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார். ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து அனைவரும் தமிழ் சுவைக்கச் செய்தார்.

நான்காம் தமிழ்ச் சங்கம்:
                   முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தனர் தமிழ்ப் புலவர்கள்.அச்சங்கங்கள் கடற்கோளால் கொள்ளப்பட்ட பின்னர் பரிதிமாற் கலைஞர், உவே. சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் பாசுகர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் மதுரையில் நான்காம் தமிழ்ச் அமைத்துத் தமிழை வளர்த்தனர் தமிழர்,

உலகத் தமிழ் மாநாடு:

    உலகிலேயே மொழிக்காக, முதன்முதலில் மாநாடு நடத்திய நாடு மலேசியா, அதுவும் தமிழ் மொழிக்காக நடைபெற்றது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்றும் தமிழ் ஆட்சி மொழியாகத் திகழ்கிறது. காரணம் அவ்விடங்களில் குடிபெயர்ந்த தமிழர்களின் தமிழ்ப்பற்றும் தமிழை வளர்க்கும் நோக்கமுமேயாகும், 

முடிவுரை:

            குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழினம் உலகமெலாம் பரவித் தன்புகழை நிலைநாட்டி வருவதற்குக் காரணம் தமிழ்ச் சான்றோர்களின் தியாகமே என்றால் மிகையாகாது.

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு"

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts