> தொடர் போராட்டம் ஆசிரியர்கள் அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர் போராட்டம் ஆசிரியர்கள் அறிவிப்பு!

தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வரின் வீட்டை முற்றுகையிட போவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், புதிய ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு, ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில், திருச்சியில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 25க்கும் மேற்பட்ட சங்கங்களின், 1,000த்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில், வரும் பிப்ரவரி 8ல், சென்னையில், முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவானது.நவ., 18ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், டிச., 27ல், மாவட்ட தலைநகரங்களில் மறியல், ஜன., 23, 24ல் விடுப்பு போராட்டம் என, தொடர் போராட்டம் நடத்துவது என்றும் மாநாட்டில் முடிவாகியுள்ளது.



Share:

0 Comments:

Post a Comment