*நாளை பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு*
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில், நாளை பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக உள்ளது. ஜேஇஇ. நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment