தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு எப்போது?: வெளியானது "அப்டேட்"?
தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி 2ல் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல், அதனை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்தினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி 2ல் நடத்தப்படும். பயிற்சிக்காக பள்ளிகள் அளவிலாவது தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருச்சியில் வாலிபால் போட்டிகளும், வேலூரில் செஸ் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இவை மாணவர்களின் விளையாட்டு திறன்கள் மேம்பட உதவிகரமாக இருக்கும். 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது கற்றலில் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment