> 2024-25ம் ஆண்டுக்கான Tnpsc Group 4 அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2024-25ம் ஆண்டுக்கான Tnpsc Group 4 அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..!

2024-25ம் ஆண்டுக்கான Tnpsc அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் (ஜனவரியில்) வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



Share:

0 Comments:

Post a Comment