பள்ளி மாணவர்களுக்கு ஏப். 12ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் – பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளி கல்வித் துறையானது 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரம்ஜான் பண்டிகையான ஏப்ரல் 12ம் தேதி வரை சிறப்பு வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு வகுப்புகள்:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. பிறகு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளானது 22 மற்றும் 23 தேதிகளுக்கு மாற்றப்பட்டது. மேலும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்தலின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித் துறையானது அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதில், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியுடன் இறுதித் தேர்வுகள் முடிந்ததால் எப்ரல் 6 முதல் கோடை விடுமுறை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் அதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் விதமாக சிறப்பு வகுப்புகளை ஏப்ரல் 12 வரை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி வரை வேலை நாட்களாக அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment