> DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்.! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்.!

DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்.!



சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ வளாகம்) உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் விற்பனை கவுன்ட்டர்கள், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர், திருவான்மியூரில் வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வரும் கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ தமிழ் பாடப் புத்தகங்கள், 8,9,11-ம் வகுப்புகளுக்கான மாநில பாடத் திட்ட தமிழ் புத்தகங்கள், 10, 12-ம் வகுப்பு பாட நூல்களும் நேற்று முதல் மேற்கண்ட இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் கழகம் அறிவித்திருந்தது.

ஆனால், டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பின் ஆங்கில பாட நூல் மட்டுமே நேற்று விற்கப்பட்டது. இதனால், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு அனைத்து புத்தகங்களும் ஓரிரு நாளில் விற்பனைக்கு கிடைக்கும்’’ என்றனர்.

Share:

0 Comments:

Post a Comment