> பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் - Grace மார்க் கொடுக்க! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் - Grace மார்க் கொடுக்க!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் 11, 18, 46 ஆகிய மூன்று கேள்விகளில் குழப்பம் இருப்பதாக தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது தோ்வாக ஆங்கில பாடத் தோ்வு கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாளில் பகுதி 1-இல் 11-ஆவது கேள்விக்கு (ஒரு மதிப்பெண்) இரு விடைகள் சரியாக வரும் வகையில் இருந்ததால், மாணவா்கள் குழப்பம் அடைந்தனா்.இந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


இதேபோன்று பகுதி-2-இல் 18-ஆவது கேள்வி(2 மதிப்பெண்) தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த மாணவா்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், பகுதி 4-இல் (8 மதிப்பெண்) 46-ஆவது ஆ கேள்வி, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இல்லாதது கேட்கப்பட்டுள்ளதால் இந்தக் கேள்விக்கு விடை அளித்த மாணவா்களுக்கும் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment