> 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!



தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அதன் பின் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதன் காரணமாக தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி துரிதமாக நடந்தது .


சமீபத்தில் இப்பணிகள் முடிவடைந்த நிலையில், மதிப்பெண்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிய இருப்பதால், அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment