> தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! ~ Kalvikavi -->

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கனமழை:


தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment