> பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!



பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்நாளை (மே 6) வெளியாகிறது. தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.


இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 6) வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.


இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

0 Comments:

إرسال تعليق