> தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – முழு விவரங்களுடன்! ~ Kalvikavi -->

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – முழு விவரங்களுடன்!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – முழு விவரங்களுடன்!



தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை:


தமிழகத்தில் மே மாதத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. தற்போது கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில் வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment